டயட் உணவுகள்

சீரக புழுங்கல் அரிசி கஞ்சி

Puzhungal Arisi Kanji

சமைக்க தேவையானவை


  • புழுங்கல் அரிசி – ஒரு கப்
  • வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் – 2 சிட்டிகை,
  • மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
  • பாசிப்பருப்பு – 25 கிராம்
  • சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்,
  • தயிர் – ஒரு கப் (கடைந்தது)
  • உப்பு – தேவையான அளவு


செய்முறை


முதலில்புழுங்கல் அரிசியை வாணலியில் வறுத்து மிக்ஸியில் அடித்து ரவை போல உடைத்துக்கொள்ளவும்.

வெறும் வாணலியில் பாசிப்பருப்பு, வெந்தயத்தை லேசாக வறுத்து, ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

அனைத்தையும் ஒன்றுசேர்த்து, 3 கப் நீர் விட்டு, மஞ்சள்தூள், உப்பு, மிளகுத்தூள், சீரகம் சேர்த்து, குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவிட்டால் நன்றாக குழைந்து வெந்துவிடும். பிறகு, இறக்கி வைத்து, கடைந்த தயிர் கலந்து பின்பு பரிமாறவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button