
சமைக்க தேவையானவை
- புளி—1 எலுமிச்சை அளவு
- வறுக்க—நல்லெண்ணெய்—4 டேபில் ஸ்பூன்
- வறுத்தரைக்க சாமான்கள்
- மிளகாய் வற்றல்—3
- கடலைப்பருப்பு—1டீஸ்பூன்,
- தனியா–2 டீஸ்பூன்
- அரிசி—அரை டீஸ்பூன்
- மிளகு—-1 டீஸ்பூன்
- தேங்காய்த் துருவல்–2 டேபிள் ஸ்பூன்
- 1 டீஸ்பூன் கடுகு
- பெருங்காயம்—சிறிது
- வேர்க்கடலை—–2 டேபிள் ஸ்பூன்
- ருசிக்கு—உப்பு, துளி வெல்லம்
- அரை டீஸ்பூன்—-வெந்தயம்
- மஞ்சள் பொடி—அரைடீஸ்பூன்
- கறிவேப்பிலை சிறிது
செய்முறை
முதலில் புளியை ஊற வைத்து, 2, 3 கப் அளவிற்கு சாறு எடுத்துக் கொள்ளவும்.சிறிது எண்ணெயில் வறுக்கக் கொடுத்தவைகளை சிவக்க வறுத்து , தேங்காயையும் போட்டுப் பிறட்டி ஆறியவுடன் மிக்ஸியிலிட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு குழம்புப் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம்பெருங்காயம், நிலக்கடலை, தாளித்து, கறிவேப்பிலையை வதக்கி புளி ஜலத்தைச் சேர்த்து கொதிக்க விடவும்.
உப்பு, வெல்லம் மஞ்சள் சேர்த்து மிகுதி எண்ணெயில் சுண்டைக்காய் வற்றலை நிதானமானதீயில் நன்றாக வறுத்துக் கொதிக்கும் குழம்பில் கொட்டி. இறக்கவும். காரம் அதிகம் வேண்டுமானால் மிளகாய்அதிகம் சேர்க்கவும். பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1