குழம்பு

செட்டிநாடு புளிக்குழம்பு

Chettinad Puli Kulambu

சமைக்க தேவையானவை


  • சாம்பார் தூள்(குழம்பு மிளகாய்த்தூள் ) – 2-3 தேக்கரண்டி
  • தக்காளி – 2 பொடியாக நறுக்கியது
  • சின்ன வெங்காயம்(தோல் உரித்தது ) – 1/2 கப்
  • பூண்டு (தோல் உரித்தது) – 10 பல்
  • புளி (சிறிய எலுமிச்சை அளவு )
  • வெங்காய கறி வடகம் – 1/4கப்

தாளிக்க

  • வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
  • சோம்பு – 1/4 தேக்கரண்டி


செய்முறை


முதலில் புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.பின் ஒரு பாத்திரத்தில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி வெந்தயம், சோம்பு சேர்த்து தாளிக்கவும்.

பிறகு இதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின் தக்காளி வதங்கியவுடன் சாம்பார் தூள் அல்லது குழம்பு தூள் சேர்த்து வதக்கி, புளி கரைசலை சேர்க்கவும்.இதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குழம்பு திக்காகும் வரை கொதிக்க விடவும்.

ஒரு சிறு பாத்திரத்தில் பொரிப்பதற்கு தேவையான அளவு என்னை ஊற்றி வெங்காய கறி வடகத்தை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.பின் பொரித்த வடகத்தை குழம்பில் சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் குழம்பை இறக்கவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button