
சமைக்க தேவையானவை
- மட்டன் – அரை கிலோ
- பாசுமதி அரிசி
- இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
- பட்டை சிறிய துண்டு
- தேங்காய்ப் பால் – 2 கப்
- ஏலக்காய் – 1
- தயிர், கிராம்பு, தக்காளி – 2
- பிரியாணி இலை – தலா 2
- வெங்காயம் – 1
- நெய், எண்ணெய் – தலா 2 டேபிள்ஸ்பூன்
- மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
- கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
- புதினா-கொத்தமல்லி – தலா கால் கப்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பாசுமதி அரிசியை அரை வேக்காட்டில் வேக வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து, வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
இதனுடன், மட்டன் துண்டுகளை சேர்த்துக் கிளறி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் வதக்கவும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து தேங்காய்ப் பால் விட்டு வேக வைத்து எடுக்கவும். கறி வெந்து மசாலா கெட்டியாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
பின்பு வாய் அகலமான பாத்திரத்தில் வேக வைத்த சாதம், வெந்த கறிக்கலவையை சேர்த்துக் கிளறவும். இதை குறைந்த தணலில் 15 நிமிடம் நன்கு வைத்து வேக விடவும். வெந்ததும் புதினா தூவி பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1