பிரியாணிபிரியாணி அசைவம்மீன்

செம்மீன் பிரியாணி

Sem meen Biriyani

சமைக்க தேவையானவை


  • பாஸ்மதி அரிசி – ½ கிலோ
  • குங்கும பூ – சிறிதளவு
  • கரம் மசாலா – 1 டீஸ்பூன்
  • தேங்காய் பால் – 1 கப்
  • உப்பு – தேவைக்கேற்ப
  • முந்திரி – 10
  • புதினா – தேவைக்கேற்ப
  • இஞ்சி பூண்டு விழுது – 1 ½ டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 3
  • மிளகு – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
  • பிரியாணி இலை – 2
  • தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • செம்மீன் (இறால்) – 1 கப்
  • நெய் – 2 டீஸ்பூன்


செய்முறை


முதலில் ஒரு குக்கரில் சிறிதளவு நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் விட்டு அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, கறிவேப்பிலை மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர், தேங்காய் பால், பச்சை மிளகாய் விழுது, புதினா மற்றும் மல்லித்தழை போடவும்.

இதனுடன் உப்பு மற்றும் பாஸ்மதி அரிசியைச் சேர்த்த, ஒரு விசில் வரும் வரை வேக வைததபின் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் கறிவேப்பிலை இலை சேர்த்து லேசாக வதக்கவும்.

அத்துடன் வெங்காய விழுது இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கய பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் சுத்தம் செய்துள்ள செம்மீன் (இறால்), தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து 5 முதல் 7 நிமிடங்கள் வேக வைக்கவும். கடைசியாக மல்லித் தழையை தூவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தம் போடும் முறை ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு நீளவாக்கில் வெட்டிய வெங்காயம் போட்டு வறுத்து வைத்துக் கொள்ளவும். அதை வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் சின்ன கிண்ணத்தில் சூடான பாலில் குங்குமப்பூ போட்டு வைத்துக் கொள்ளவும்.

ஒரு அகல பாத்திரத்தில் சிறிதளவு நெய் ஊற்றி தயாரித்து வைத்துள்ள செம்மீன் (இறால்) மசாலா சிறிதளவு போட்டு அதன்மேல் வேக வைத்துள்ள சாதம் ஒரு அடுக்குப் போடவும். பின்னர் மீண்டும் செம்மீன் (இறால்) மசாலா சிறிதளவு போட்டு அதன்மேல் வேக வைத்துள்ள சாதத்தால் மீண்டும் ஒரு அடுக்கு போடவும்.

அதன் மேல் வறுத்து வைத்துள்ள வெங்காயம், முந்திரி, குங்குமப்பூ பால் சேர்த்து, அதன்மேல் தட்டு போட்டு மூடி மேலே ஒரு கனமான பொருள்வைத்து 10 முதல் 15 நிமிடம் வைத்த பிறகு பரிமாறவும். மிகவும் ருசியான தலைச்சேறி செம்மீன் பிரியாணியின் சுவை மீண்டும் மீண்டும் சமைத்துச் சுவைக்க வைக்கும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button