
சமைக்க தேவையானவை
- சேமியா – 2 டேபிள்ஸ்பூன்
- மைதா – ஒரு டேபிள்ஸ்பூன்
- பால் – ஒரு கப்
- கேரட் – 1
- பீன்ஸ் – 5
- ஆலிவ் ஆயில் – ஒரு டேபிள்ஸ்பூன்
- வெங்காயம் – ஒன்று
- கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்
- துருவிய சீஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்
- தக்காளி – தலா ஒன்று
- சர்க்கரை – தேவைக்கேற்ப
- உப்பு– தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் கேரட்டை துருவிக்கொள்ளவும், பீன்ஸை நீளவாக்கில் நறுக்கவும். தக்காளி, வெங்காயத்தை பெரிய துண்டாக நறுக்கவும். இவற்றுடன் போதிய அளவு நீர் விட்டு வேக வைக்கவும். சேமியாவை தேவையான தண்ணீர் விட்டு தனியாக வேகவைத்து எடுத்து வைக்கவும்.
கடாயில் ஆலிவ் ஆயில் விட்டு சூடாக்கி, மைதாவை குறைந்த தீயில் 2 நிமிடங்கள் வறுக்கவும்பிறகு பாலை சிறிது சிறிதாக ஊற்றி கட்டித்தட்டாமல் கலந்துகொண்டு… தேவையான சர்க்கரை, உப்பு சேர்த்து 6 நிமிடம் கொதிக்கவிடவும். வெந்த சேமியாவை சேர்த்துக் கிளறவும்,
வேகவைத்த காய்கறி கலவையை இதில் ஊற்றிக் கிளறி இறக்கவும். பரிமாறும்போது துருவிய சீஸ் சேர்த்து, மல்லித்தழை தூவி பின்புபரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1