
சமைக்க தேவையானவை
- பீன்ஸ் – 50 கிராம்
- சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்
- கேரட் – ஒன்று,
- ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
- வெங்காயத்தாள் – ஒன்று
- முட்டைகோஸ் – 100 கிராம்,
- சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
- வெள்ளை மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
- அஜினமோட்டோ – அரை டீஸ்பூன்
- உப்பு – தேவைக் கேற்ப
செய்முறை
முதலில் அனைத்து காய்கறிகளையும் மெலிதாக ஒரே அளவாக நீட்டமாக (தீக் குச்சி போன்ற துண்டுகளாக) நறுக்கிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து… அஜினமோட்டோ, உப்பு சேர்த்து 7 நிமிடங்கள் வதக்கவும். காய்கறி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, சோயா சாஸ் சேர்த்து குறைந்த தீயில் வேகவிடவும்.
கொதிவரும்போது, சோள மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து சூப்பில் சேர்க்கவும். இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து, இறக்கிப் பின்பு பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1