இனிப்பு பொங்கல்பொங்கல்
ஜவ்வரிசி இனிப்பு பொங்கல்

சமைக்க தேவையானவை
- ஜவ்வரிசி – 300 கிராம்
- வெல்லம் – 200 கிராம்
- பால் – 200 மி.லி.
- நெய் – 50 கிராம்
- முந்திரி பருப்பு – 10
- உலர்ந்த திராட்சை – 5
- ஏலக்காய் – 5
செய்முறை
முதலில் அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதித்ததும் ஜவ்வரிசியை போடவும்.
ஜவ்வரிசி நன்றாக வெந்ததும் ஏலக்காய், வெல்லம் தட்டிப் போட்டு கிளறவும். அடுப்பு நிதானமாக எரிய வேண்டும். அடிபிடிக்காமல் கிளறி விடுங்கள். தற்போது ஜவ்வரிசி நன்கு கெட்டியாக வந்திருக்கும்.
அப்போது ருசிக்காக சிறிது பாலையும், நெய்யையும் ஊற்றவும். முந்திரி, திராட்சையை நெய்யில் பொன்னிறமாக வறுத்து பொங்கலில் சேர்க்கவும். அவ்வளவுதான் ஜவ்வரிசி இனிப்பு பொங்கல் தயார்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1