
சமைக்க தேவையானவை
- சின்ன வெங்காயம் – 6
- ஆலிவ் ஆயில் – 2 ஸ்பூன்
- கொள்ளு – கால் கப்
- வெள்ளை சென்னா – கால் கப்
- பார்லி – கால் கப்
- புழுங்கல் அரிசி – கால் கப்
- வால் நட் – கால் கப்
- ராகி மாவு – ஒரு மேசை கரண்டி
- இஞ்சி – ஒரு அங்குல துண்டு
- பூண்டு – 3 பல்
- ப.மிளகாய் – 2 கொத்து
- மல்லி, புதினா, கருவேப்பிலை – சிறிது
- உப்பு – தேவைக்கு
செய்முறை
முதலில் கொத்து மல்லி, புதினா, கருவேப்பிலை, சின்ன வெங்காயம், ப.மிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொள்ளு, வெள்ளை சென்னா, அரிசியை இரவே ஊற போடவும்.
பார்லி அரைப்பதற்கு ஒரு மணி நேரம் முன் ஊறவைக்கவும். வால் நட்டை ஒரு மணி நேரம் முன் கொதிக்கும் வெண்ணீரில் ஊறவைத்து தோலெடுகக்வும். அரைக்கும் போது பூண்டு, இஞ்சியை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அரிசியை போட்டு நன்கு அரைத்து மீதி உள்ள கொள்ளு, வெள்ளை சென்னா, பார்லி, வால் நட்டை, பொருட்களையும் முக்கால் பதத்திற்கு அரைகக்வும். அரைத்த கலவையில் வெங்காயம், கொத்து மல்லி, புதினா, கருவேப்பிலையை சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை தோசைகளாக கொஞ்சம் ஆலிவ் ஆயில் தெளித்து சுட்டெடுக்கவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1