
சமைக்க தேவையானவை
- கறிவேப்பிலை – சிறிதளவு
- எண்ணெய் – 3 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் – பாதி அளவு
- பூண்டு – 3 பல்
- தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
- தக்காளி – 2 பெரியது
- கொத்தமல்லி இலை – கால் கட்டு
- கடலை பருப்பு – ஒரு தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
- புளி – சிறிய கோலிகுண்டு அளவு
- சீரகம் – அரை தேக்கரண்டி
- மிளகாய் வற்றல் – 3
- கடுகு – கால் தேக்கரண்டி
- பெருங்காயம் – சிறிதளவு
செய்முறை
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு, மிளகாய் வற்றல் போட்டு சிவக்க வறுக்கவும்.அதனுடன் தேங்காய் துருவல் மற்றும் புளி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அதே கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம் பின்னர் தக்காளி போட்டு வதக்கவும்.
தக்காளி வதங்கியவுடன் கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும். இந்த கலவை ஆறியவுடன் முதலில் அரைத்த கலவையுடன் சேர்ந்து அரைத்துக் கொள்ளவும்.
வேறு ஒரு சின்ன கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து சட்னியில் கொட்டவும்.சுவையான தக்காளி மல்லி சட்னி தயார். இது இட்லி, தோசைக்கு அருமையான சைடு டிஷ்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1