அசைவம்இறால்

டோஃபு இறால் பிரட்டல்

Tofu prawn Pirattal

சமைக்க தேவையானவை


  • இறால் – 200 கிராம்
  • வெள்ளை மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
  • வெங்காயத்தாள் – 3
  • எண்ணெய் – தேவையான அளவு
  • சோயா சாஸ் – 2 தேக்கரண்டி
  • பூண்டு பல் – 8
  • சிகப்பு குடைமிளகாய் – ஒன்று
  • டோஃபு – 400 கிராம்


செய்முறை


டோஃபுவை ஒரு அங்குல விரல் கண துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும். பூண்டை துருவியில் துருவவும். வெங்காயத்தாளை பொடிதாக நறுக்கவும்.

குடை மிளகாயையும் சின்ன துண்டங்களாக நறுக்கவும். இறாலை சுத்தம் செய்து கழுவிக்கொள்ளவும்.பின்பு ஒரு நாண்ஸ்டிக் தவாவில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு டோஃபுவை லேசாக பொரித்து எடுக்கவும்.

பின்பு அதே வாணலியில் மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு துருவிய பூண்டை அதில் போட்டு வதக்கவும்.

மேலும் அதில் இறால் போட்டு வதக்கி குடை மிளகாயையும் சேர்த்து சோயா சாஸை ஊற்றி அதில் பொரித்து வைத்துள்ள டோஃபுவை போட்டு மூடி போட்டு வேகவிடவும்.

நன்றாக வெந்த பின்பு அதில் மிளகு தூள், அஜினோமோட்டோ, வெங்காயத்தாள் போட்டு இறக்கவும். இது வெள்ளை சோற்றுடன் சாப்பிட ஏற்றது..

 

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button