
சமைக்க தேவையானவை
- இட்லி மாவு – 2 கப்
- தக்காளி – 2
- பூண்டு – 3 பல்
- மிளகாய்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
- மல்லித்தழை – சிறிதளவு.
- இஞ்சி – 1 துண்டு
- கறிவேப்பிலை – சிறிதளவு
- மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 2
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் இட்லி மாவைக் கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்குங்கள்.
அரைக்கும் பொருட்களை ஒன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேருங்கள்.
அத்துடன் சிட்டிகை உப்பு சேர்த்து, வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கி, அரைத்துள்ள விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக கிளறுங்கள்.
பின்பு தக்காளி, தேவையான உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கி இட்லி, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்குங்கள்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1