சாப்பாடுரைஸ்வெரைட்டி ரைஸ்

தக்காளி சாதம்

Tomato Rice

சமைக்க தேவையானவை


 • நன்கு உதிரியாக வடிக்கப்பட்ட சாதம் – 1 கோப்பை
 • தக்காளி – 4/5
 • பெரிய வெங்காயம் – 1
 • பூண்டு – 5/6 பற்கள்
 • மிளகாய் பொடி -1/4 தேக்கரண்டி
 • மஞ்சள் பொடி – 1 சிட்டிகை
 • கொத்தமல்லி – சிறிதளவு
 • உப்பு – தேவையான அளவு
 • எண்ணெய் – 1 தேக்கரண்டி
 • கிராம்பு – 2
 • பட்டை – 1 அல்லது 2
 • சீரகம் – 1/2 தேக்கரண்டி
 • பச்சை மிளகாய் – 1
 • கறிவேப்பிலை – சிறிதளவு


செய்முறை


தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி தழை போன்றவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயையும் நீள வாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும்.

அடுப்பில் தீமூட்டி, அதில் வாணலியை வைத்து, அதில் 1 தேக்கரண்டி எண்ணையை ஊற்றி அது காய்ந்ததும் அதில் பச்சைமிளகாய், சீரகம், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பிறகு, அதில் நறுக்கப்பட்ட வெங்காயம் மற்றும் பூண்டின் பற்களை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

பின்பு இதில் நறுக்கப்பட்ட தக்காளி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி மற்றும் உப்பை சேர்த்து பச்சையான வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

தக்காளி நன்கு வதங்கியதும் அந்த வாணலியில் சிறிது தண்ணீர் ஊற்றி, அந்த தக்காளி மற்றும் இதர பொருட்களின் கலவை இளகும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.

இந்த கலவை தொக்கு போன்ற பதத்தில் வரும் போது வாணலியை அடுப்பிலிருந்து இறக்கி, அதில் உதிரியான சாதத்தை கலந்து, நன்கு பிரட்டி அதில் கொத்துமல்லி தழைகளை தூவ, சுவையான தக்காளி சாதம் தயார்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button