சைவம்பூரி

தக்காளி பூரி

tomato poori

சமைக்க தேவையானவை


  • கோதுமை மாவு – 2 கப்
  • தக்காளி – 3
  • காய்ந்த மிளகாய் – 2
  • உப்பு – சுவைக்கேற்ப
  • நெய் அல்லது எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
  • எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு


செய்முறை


தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து, தோலை உரித்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

மிளகாயை வெந்நீரில் சில நிமிடங்கள் ஊறவைத்து, விழுதாக அரைத்துக்கொள்ளவும். கோதுமை மாவுடன் தக்காளி விழுது, மிளகாய் விழுது, நெய் அல்லது எண்ணெய், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

சிறு சிறு பூரிகளாக தேய்த்து, காயும் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

 

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button