சைவம்ரசம்

தக்காளி ரசம்

Tomato juice

சமைக்க தேவையானவை


  • தக்காளி – 2 (பிசைந்தது)
  • புளி – சிறு நெல்லிக்காய் அளவு
  • பருப்பு வேக வைத்த தண்ணீர் – 1/4 கப்
  • மிளகு – 1 டீஸ்பூன்
  • வரமிளகாய் – 4
  • பூண்டு – 6 பற்கள்
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • மல்லி – 1 டீஸ்பூன்
  • பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • கொத்தமல்லி – சிறிது


செய்முறை


முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாயை 1 நிமிடம் வறுத்து இறக்கிக் கொள்ளவும். பின் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் வறுத்த வரமிளகாய், மிளகு, பூண்டு, சீரகம், மல்லி சேர்த்து கொரகொரவென்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ளதை சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

பிறகு அதில் புளிச்சாறு மற்றும் உப்பு சேர்த்து, அத்துடன் பருப்பு வேக வைத்த தண்ணீர் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, கொத்தமல்லி தூவி, குறைவான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, பெருங்காயத் தூளைத் தூவினால், கேரளா தக்காளி ரசம் ரெடி.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button