
சமைக்க தேவையானவை
- காராமணி, தேங்காய்ப்பால் – தலா கால் கப்
- மிளகு – அரை டீஸ்பூன்
- புளி – 50 கிராம்
- கடுகு, சீரகம், பெருங்காயத்தூள
- மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்
- எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி – கால் கப்
- காய்ந்த மிளகாய் – 5
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதல் நாள் இரவே காராமணியை ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும் .பிறகு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம் போட்டு வறுத்து ஆற வைக்கவேண்டும்.
பின்னர் அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவேண்டும். நன்கு கொதித்த பின் , வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடிக்கவேண்டும்.
பின்பு அதனுடன் வேக வைத்து, ஆற வைத்த காராமணி, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து ஒரு சுற்று அரைத்து, புளிக்கரைசலுடன் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். பிறகு, தேங்காய்ப்பால் சேர்த்து லேசாக கொதிக்க விட்டு இறக்கவேண்டும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1