
சமைக்க தேவையானவை
- இட்லி அரிசி – 2 கப்
- பச்சரிசி – ஒரு கப்
- சமையல் சோடா – அரை டீஸ்பூன்
- உளுந்து – ஒரு கப்
- பழைய சாதம் – அரை கப்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசி வகைகள், உளுந்து அனைத்தையும் இரு முறை கழுவி, அத்துடன் பழைய சாதத்தையும் கலந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த தண்ணீரை வடிக்காமல், கிரைண்டரில் அதையே உபயோகித்து அரைக்கவும். இட்லி பதத்தில் அரைத்து, உப்பு மட்டும் சேர்த்து 10 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
இட்லி வார்ப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன் சமையல் சோடா, உப்பு கலந்து, பின் பெரிய இட்லி தட்டுகளில் வார்த்துப் பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1