சான்விஜ்பாஸ்ட் ஃபுட்

தயிர் சாண்ட்விச்

Yogurt sandwich

சமைக்க தேவையானவை


  • ரொட்டி-4
  • தயிர் -1 கப்
  • சோளம்- 1/4 கப்
  • முட்டைக்கோஸ்- 1/4 கப்
  • கேரட்- 1/4 கப்
  • குடை மிளகாய்- 1/4 கப்
  • சர்க்கரை தூள்- தேவையான அளவு
  • உப்பு- தேவியான அளவு
  • மிளகு- தேவையான அளவு


செய்முறை


முதலில் 1 கப் தயிர் எடுத்து கொண்டு அதலில் படிந்திருக்கும் தேவை இல்லாத தண்ணீரை நீக்கி கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறிய பாத்திரத்தில் தயிர், சோளம், முட்டைக்கோஸ், கேரட், குடை மிளகாய் போன்றவற்றை ஒன்றுடன் ஒன்று சேரும் வரை நன்கு கலந்து கொள்ளவும்.

பிறகு தூளாக அரைத்த சர்க்கரை, உப்பு, மிளகு ஆகியவை சேர்த்து கலக்கவும். ரொட்டியை எடுத்து அதனின் சுற்று பகுதியில் இருப்பதை நீக்கிவிட்டு கலந்த தயிர் கலவையை ரொட்டியில் வைக்கவும். அதனை மேல் இன்னொரு ரொட்டியை வைத்து மூடினால் சுவையான தயிர் சாண்ட்விச் தயார். இதனை தக்காளி சாஸுடன் சாப்பிடால் கலக்கல் டேஸ்ட்டாக இருக்கும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button