அல்வாஇனிப்புஸ்வீட்

தர்பூசணி அல்வா

சமைக்க தேவையானவை


  • தர்பூசணி பழம் – 1
  • வெல்லம் – அரை கிலோ
  • தேங்காய் பால் – கால் கப்
  • ஏலக்காய் தூள் – அரை தேக்கரண்டி
  • முந்திரி பருப்பு – 5
  • பாதாம் – 10
  • நெய் – சிறிதளவு


செய்முறை


தர்பூசணி பழத்தை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு கூழாக்கிக்கொள்ளவும். பாதாம், முந்திரியை மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். வெல்லத்தை பொடித்து தண்ணீரில் கரைத்து, வடிகட்டி பாகு காய்ச்சிக்கொள்ளவும்.

பாகு பதத்துக்கு வந்ததும் தர்பூசணி கூழ், தேங்காய் பால் ஊற்றி வேக வைக்கவும். அவ்வப்போது சிறிதளவு நெய் ஊற்றி கிளறவும். அல்வா பதத்துக்கு வந்ததும் முந்திரி பருப்பு, பாதாம், ஏலக்காய் தூள் தூவி இறக்கவும். பின்னர் ஆறியதும் துண்டுகளாக நறுக்கி அல்வாவை சுவைக்கலாம்.

உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button