
சமைக்க தேவையானவை
- பச்சரிசி – கால் கப்
- தர்ப்பூசணியின் வெள்ளைப்பகுதி – கால் கப் (துருவியது)
- டெமேரேரா சர்க்கரை – அரை கப்
- தர்ப்பூசணிச் சாறு – 1 கப்
- தண்ணீர் – 1 கப்
- நெய் – 1 டேபிள்ஸ்பூன்
- முந்திரி – 4
- கிஸ்மிஸ் (உலர்திராட்சை) – 6
- ஏலக்காய் (நசுக்கியது) – 1
செய்முறை
முதலில் கழுவிய பச்சரிசி மற்றும் துருவிய தர்ப்பூசணியின் வெள்ளைப்பகுதியை பொங்கல் பானையில் சேர்க்கவும். இத்துடன் ஒரு கப் தண்ணீர், தர்ப்பூசணிச் சாறு விட்டு அரிசிக் கலவையை வேகவிடவும்.
பிறகு, டெமெரேரா சர்க்கரையைச் சேர்த்துக் கரைய விடவும். சர்க்கரை கரைந்து பொங்கலோடு சேர்ந்து வரும்வரை வேகவிடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டு சூடானதும் முந்திரி, கிஸ்மிஸ் (உலர்திராட்சை), நசுக்கிய ஏலக்காய் சேர்த்துப் பொரிந்ததும், பொங்கலில் ஊற்றி இறக்கி சூடாகப் பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1