சிறுதானியங்கள்தோசை

தினை தோசை

சமைக்க தேவையானவை


  • பாசிப்பருப்பு – ஒரு கப்
  • தினை அரிசி – முக்கால் கப்
  • சின்ன வெங்காயம் – 10
  • இஞ்சி – சிறிய துண்டு
  • பச்சை மிளகாய் – 4 (அல்லது காரத்துக்கேற்ப)
  • கொத்தமல்லித்தழை – கைப்பிடியளவு
  • உப்பு, எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை


முதலில் தினை அரிசி, பாசிப்பருப்பை முதல் நாள் இரவே ஊறவிடவும். மறுநாள் களைந்து, தோலுரித்த சின்ன வெங்காயம், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் உப்பு சேர்த்துக் கரைக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, அரைத்து வைத்த மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுத்தால். தினை பெசரட் தயார்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button