
சமைக்க தேவையானவை
- பாஸ்மதி அரிசி – 1 கப்
- நெய் – 2 மேஜைக்கரண்டி
- சீரகம் – 1/4 தேக்கரண்டி
- இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி
- தக்காளி விழுது – 1/4 கப்
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
- மிளகாய் – 8
- உப்பு – தேவைக்கேற்ப
- வெள்ளை நிறத்திற்கு
- பாஸ்மதி அரிசி – 1 கப்
- பச்சை நிறத்திற்கு
- நெய் – 2 மேஜைக்கரண்டி
- சீரகம் – 1/4 தேக்கரண்டி
- இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் விழுது – 1 தேக்கரண்டி
- கீரை சாறு – 1/2 கப்
- உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
அடுப்பில் கடாய் வைத்து அதில் இரண்டு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் அதில் சாதம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மற்றொரு பேனில் அதே போல நெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் மிளகாய் தூள், மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி விழுது, உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சாதம் வேகும் வரை மூடி வைக்கவும். மற்றொரு கடாயில் மஞ்சள் தூள் மற்றும் சாதம் சேர்க்கவும். அதில் பச்சை மிளகாய் விழுது, இஞ்சி விழுது மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி, கீரை சாறு சேர்த்து கிளறி மூடி வைத்து வேக விடவும்.
ஒரு தட்டில் ரிங் மோல்ட் வைத்து அதில் பச்சை நிற புலாவ் வைத்து அழுத்தம் கொடுக்கவும்.
அடுத்து அதன் மேல் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற புலாவ்களை ஒன்றன்மீது ஒன்று வைத்து அழுத்தம் கொடுக்கவும். ரிங் மோல்டை மெதுவாக எடுத்து ஒரு தட்டில் இந்த திரங்கா புலாவை சூடாக பரிமாறவும். அருமையான திரங்கா புலாவ் ரெடி.