சைவம்பூரி

தேங்காய் பூரி

coconut poori

சமைக்க தேவையானவை


  • மைதா – 2 கப்
  • தேங்காய் துருவல் – கால் கப்
  • டூட்டிஃப்ரூட்டி – ஒரு டேபிஸ்பூன்
  • பொடித்த சர்க்கரை – 5 டேபிஸ்பூன்
  • ஏலக்காய்தூள் – ஒரு சிட்டிகை
  • எண்ணெய் அல்லது நெய் – ஒரு டீஸ்பூன்
  • சோம்பு (பொடித்தது) – கால் டீஸ்பூன்
  • எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
  • உப்பு – ஒரு சிட்டிகை


செய்முறை


மைதாவுடன் துளி உப்பு, தேவையான தண்ணீர் ஊற்றிப் பிசைந்து வைக்கவும். டூட்டிஃப்ரூட்டியைப் பொடியாக நறுக்கவும். அத்துடன் சர்க்கரை தூள், ஏலக்காய்தூள், சோம்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

வெஜிடபிள் பூரிக்கு சொன்னது போலவே, மைதா மாவு உருண்டைகளுக்குள் தேங்காய் பூரணம் வைத்து பூரிகளாகத் தேய்த்துப் பொரித்தெடுக்கவும். மணமும் சுவையும் பிரமாதப்படுத்தும்.

 

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button