அசைவ சூப்சூப்

நண்டு சூப்

Crab soup

சமைக்க தேவையானவை


  • நண்டு – அரை கிலோ
  • வெங்காயத் தாள் – 3
  • மிளகுத்தூள் – கால் தேக்கரண்டி
  • கான்ஃப்ளார் – ஒன்றரை தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 2
  • பூண்டு – 4 பல்
  • இஞ்சி – ஒரு துண்டு
  • அஜினோ மோட்டோ – கால் தேக்கரண்டி
  • பால் – கால் கப்
  • வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
  • உப்பு – ஒரு தேக்கரண்டி


செய்முறை


முதலில் வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை பொடியாக வெட்டி தனியாக வைக்கவும். பாலில் கான்ஃப்ளாரை கரைத்து வைக்கவும். நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்கவும்.

பிறகு ஆற விட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கி வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். கொதிக்கும் பொழுது நண்டு சதையை போட்டு, அஜினோ மோட்டோ, கான்ஃப்ளார் கலந்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு ஒரு கப்பில் ஊற்றி மிளகுத் தூள் தூவி, நறுக்கிய வெங்காயத் தாள் தூவி பரிமாறவும். சுவையான நண்டு சூப் தயார்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button