அசைவம்நண்டு

நண்டு ரோஸ்ட்

Crab roast

சமைக்க தேவையானவை


  • நண்டு – ஒரு கிலோ
  • இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
  • எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
  • பெரிய வெங்காயம் – ஒன்று
  • தேங்காய்பால் – 4 மேசைக்கரண்டி
  • மிளகு பவுடர் – 3/4 தேக்கரண்டி
  • உப்பு – தேவைக்கேற்ப
  • மிளகாய் பொடி – ஒரு தேக்கரண்டி
  • சீரகப்பவுடர் – ஒரு தேக்கரண்டி


செய்முறை


முதலில் நண்டை சுத்தம் செய்து துண்டங்கள் செய்யவும்,பின்பு வெங்காயத்தை பொடிதாக நறுக்கவும். வாயகன்ற கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விடவும், சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும்வரை வதக்கவும்.

பிறகு அதில் மிளகாய் பவுடர் போட்டு வதக்கி மேலும் அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசனை வரும் வரை கிளறவும். பிறகு அதில் நண்டு துண்டங்களைப் போட்டு கிளறவும்

பிறகு அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து கடைசியில் தேங்காய்பால் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.மிதமான தீயில் மூடி வேகவிடவும்.

அடிக்கடி திறந்து கிளறி விடவும், நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து மசாலா கெட்டியானவுடன் இறக்கவும். பின்பு பரிமாறவும்

 

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button