அசைவம்

நாவைத் தூண்டும் நாஞ்சில் மீன் குழம்பு

Fish Food - Nanjil fish kulampu

நாஞ்சில் மீன் குழம்பு என்றதும் இது ஒரு ரக மீன் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியின் மீன் சமையல் முறையைத்தான் சுருக்கமாக நாஞ்சில் மீன் குழம்பு என்று கூறுகின்றனர். இது பலருக்கும் தெரிந்த ஒன்று என்றபோதும், தெரியாதவர்களுக்கு இது புதிய விசயம்தானே. கடல் சூழப்பட்டிருக்கும் நாகர்கோவில் பகுதியில் அவர்கள் வைக்கும் சமையல் முறையைத்தான் நான் இங்கு உங்களுக்கு கூறப்போகின்றேன். நீங்களும் அந்தப் பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பை செய்து ருசித்துப் பாருங்கள். நாவைத் தூண்டும். இந்த குழம்பில் இருக்கும் ஒரு தனிச் சிறப்பே எந்த மீனை வேண்டுமானாலும் இதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே. சரி வாங்க, நாஞ்சில் மீன் குழம்பு செய்வோம். (Nanjil Fish)

சமைக்க தேவையானவை


 • மீன் (ஏதேனும் வகை) – 6 முதல் 7 துண்டுகள்
 • புளி – சின்ன எலுமிச்சம் பழ அளவு
 • பச்சைமிளகாய் – 2
 • உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைக்க


 • தேங்காய் – ஒரு சிறிய மூடி
 • பெரிய வெங்காயம் – 1 அல்லது சின்ன வெங்காயம் – 8
 • மல்லி விதைகள்(தனியா) – 3 மேசைக்கரண்டி
 • காய்ந்த மிளகாய் – 10
 • பெருஞ்சீரகம் – 1 மேசைக்கரண்டி
 • மிளகு – 1 தேக்கரண்டி
 • கறிவேப்பிலை – 3 நெட்டுகள்

தாளிக்க


 • எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
 • வெந்தயம் – 1 தேக்கரண்டி

செய்முறை :


மீன் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளவும். அதனுடன் ஒரு நெட்டு கறிவேப்பிலை, நறுக்கியப் பச்சைமிளகாய் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.பெரிய வெங்காயத்தை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பயன்படுத்துவதாக இருந்தால் நறுக்க தேவையில்லை. மற்ற அரைக்க வேண்டியப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். (Nanjil Fish)


தேங்காயை சிறு துருவல்களாக துருவி எடுத்துக் கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் தேங்காய் துருவல், வெங்காயம், மல்லி, காய்ந்த மிளகாய், மிளகு, பெருஞ்சீரகம் மற்றும் இரண்டு நெட்டு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல் நன்கு பொன்னிறமாக பொலபொலவென்று ஆகும் வரை வறுக்க வேண்டும். (Nanjil Fish)


வறுத்தப் பொருட்களை ஐந்து நிமிடங்கள் ஆற வைக்கவும். பிறகு மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு பொடித்துக் கொள்ளவும்.அதில் அரைகப் தண்ணீர் சேர்த்து நன்கு மைப் போல் மீண்டும் அரைத்துக் கொள்ளவும். (முதலிலேயே தண்ணீர் சேர்த்து அரைத்தால் நன்றாக அரையாது, மை போல் அரைத்தால் தான் இதன் சுவை கூடும்.)ஏற்கனவே கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலுடன் இந்த விழுதை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு குழம்பு போல் கலக்கி வைத்துக் கொள்ளவும். (Nanjil Fish)


வாணலியை அடுப்பில் வைத்து அரை மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயத்தை போட்டு தாளிக்கவும். வெந்தயம் பொன்னிறமானதும் கரைத்து வைத்துள்ள குழம்புக் கலவையை ஊற்றவும்.குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் சுத்தம் செய்த மீன் துண்டுகளை சேர்க்கவும். (Nanjil Fish)


குழம்பு பாத்திரத்தை மூடி வைக்கும் பொழுது மூடியை சிறிது திறந்திருக்குமாறு வைத்து பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும் மணமணக்கும், நாவூறும் சுவையான நாஞ்சில் மீன் குழம்பு தயார். (Nanjil Fish)


குறிப்பு: நாகர்கோவில் பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பு வகை. பழங்கால முறைப்படி செய்வதால் இது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியமானது. எந்த மீனிலும் இந்தக் குழம்பைச் செய்யலாம். இந்த குழம்பை சூடாக்கி இரண்டு நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம். அடுத்த நாள் சாப்பிடும்பொழுது இதன் சுவை இன்னும் கூடும்.  மற்ற எண்ணெய்களை விட நல்லெண்ணெய்யில் இந்த குழம்பு வைத்தால் கூடுதல் சுவை உறுதி. மறக்காமல் கல் உப்பை பயன்படுத்துங்கள். தூள் உப்பை தவிர்த்துவிடுங்கள்.


ammasamaiyal / Amma Samiyal / amma samaiyal / nanjil fish kulampu / nanjil


உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button