
சமைக்க தேவையானவை
- நாட்டுக்கோழி – 1/4 கிலோ
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 1/4 கப்
- தக்காளி – 1 (சிறியது, நறுக்கியது)
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
- தண்ணீர் – 2 கப்
- கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு சுவைக்கேற்ப தாளிப்பதற்கு
- நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- பட்டை – 1/2 இன்ச்
- ஏலக்காய் – 1
- கிராம்பு – 1
- கறிவேப்பிலை – சிறிது அரைப்பதற்கு
- மல்லி விதைகள் – 1/2 டீஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- மிளகு – 1/2 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 3
- தண்ணீர் – சிறிது
செய்முறை
முதலில் மிக்ஸி ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் நாட்டுக்கோழியையும் நன்கு நீரில் கழுவிக் கொள்ளவும். பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும்.
பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் வெங்காயம் மற்றும் சிறிது உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்பு தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்கவும். அடுத்து கழுவி வைத்துள்ள நாட்டுக் கோழி, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
பின் அரைத்து வைத்துள்ள மல்லி, சீரக பேஸ்ட்டை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, உப்பு சுவை பார்த்து, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கவும். குக்கரில் உள்ள விசில் போனாலும், குக்கரைத் திறந்து கொத்தமல்லியைத் தூவினால், சுவையான நாட்டுக்கோழி சூப் தயார்.