
சமைக்க தேவையானவை
- கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
- நல்லெண்ணெய் – 5 டீஸ்பூன்
- நார்த்தங்காய் – 1
- மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
- புளி – ஒரு எலுமிச்சைப்பழ அளவு
- பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
- தாளிக்க கடுகு – சிறிது
- காய்ந்தமிளகாய் – 7 அல்லது 8
- வெல்லம் – சிறிது
- தனியா – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் நார்த்தங்காயை 8 துண்டுகளாக நறுக்கி விதைகளை நீக்கவேண்டும் .பின் கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, காய்ந்தமிளகாய் ஆகியவற்றை நன்கு வறுக்கவும்.
பின்னர் ஆறியதும் மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். புளியை கெட்டியாக கரைத்து கொள்ளவேண்டும். பிறகு கடாயில் மீதியுள்ள நல்லெண் ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, மஞ்சள் தூள், நார்த்தங்காய் துண்டுகள், உப்பு சேர்த்து வதக்கவும்.
நார்த்தங்காய் நன்கு வதங்கியதும் புளிக்கரைசல், அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்கு கலந்து வாசனை வரும்வரை கொதிக்க விடவும். கெட்டியாக ஆனதும் வெல்லம் சேர்த்து இறக்கி, சூடாக சாதத்துடன் பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1