சைவம்தோசை

நீர் தோசை

Water dosa

சமைக்க தேவையானவை


  • பச்சரிசி – 1 கிலோ
  • தேங்காய் – 1
  • உப்பு – தேவைக்கேற்ப
  • சர்க்கரை – இரண்டு ஸ்பூன்


செய்முறை


ஒரு பாத்திரத்தில் 1 கிலோ பச்சரிசியை எடுத்து சுமார் இரண்டு மணி ஊற வைக்கவும். பிறகு அரிசியோடு தேங்காய் சேர்த்து மாவு பதத்தில் அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த மாவை வேறொரு கிண்ணத்தில் மாற்றி அதில் சர்க்கரை, உப்பு,தண்ணீர் ஆகியவை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.

அடுப்பில் தவாவை வைத்து அதில் தோசை மாவை ஊற்றவும். இரண்டு பக்கம் பொன்னிறமாக ஆகும் வரை வேக வைக்கவும்.பிறகு தோசையை எடுத்து பரிமாறலாம். இதற்கு கார சட்னியை வைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button