அசைவம்தொக்குமீன்

நெத்திலி மீன் தொக்கு

Anchovy Fish Compilation

சமைக்க தேவையானவை


  • நெத்திலி மீன் – 300 கிராம்
  • எண்ணெய் – 1/4 கப் + 1/4 கப்
  • வெந்தயம் – 1 டீஸ்பூன்
  • பூண்டு – 2 பற்கள் (பொடியாக நறுக்கியது)
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • புளிச்சாறு – 4 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை – 1 கைப்பிடி அரைப்பதற்கு
  • சின்ன வெங்காயம் – 20 (தோலுரித்தது)
  • தக்காளி – 2 (பெரியதாக நறுக்கியது)
  • மிளகு – 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2


செய்முறை


முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் நெத்திலி மீனை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம், பூண்டு சேர்த்து வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மசாலாப் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி, எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, குழம்பானது மசாலா போன்று சற்று கெட்டியாக வரும் போது, அதில் நெத்திலி மீனை சேர்த்து பிரட்டி, 5-8 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

அடுத்து அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, மீண்டும் 5-8 நிமிடம் வேக வைக்க வேண்டும். மீன் நன்கு மென்மையாக வெந்ததும், அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைத் தூவி குறைவான தீயில் பிரட்டி, எண்ணெய் தனியாக பிரியும் வரை வேக வைத்து இறக்கினால், நெத்திலி மீன் தொக்கு ரெடி.

உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button