அசைவம்கருவாடுதொக்கு

நெய்மீன் கருவாடு தொக்கு

சமைக்க தேவையானவை


  • நெய்மீன் கருவாடு – 2 துண்டுகள்
  • சின்ன வெங்காயம் – 1/2 கப்
  • பூண்டு – 1/8 கப்
  • தக்காளி – 3
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – ஒரு சிறிய குச்சி
  • நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன் தண்ணீர் – 3/4 கப்


செய்முறை


முதலில் கடாயில் எண்ணெய் விட்டு வெட்டி வைத்த சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி கறிவேப்பிலை சேர்க்கவும்.

சூடான நீரில் கருவாட்டை எடுத்து 10 நிமிடங்கள் ஊற விடவும். பின் அவற்றை கடாயில் போட்டு அதனுடன் மிளகாய் தூள் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

அவை நன்றாக வெந்து தண்ணீர் சுருண்டு தொக்கு பதத்திற்கு வந்த பின் அடுப்பை அணைக்கவும். நெய்மீன் கருவாடு தொக்கு ரெடி.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button