ரைஸ்வெரைட்டி ரைஸ்

நெய் சோறு

Ghee rice

சமைக்க தேவையானவை


  • பாசுமதி அரிசி – 2 கப்
  • முந்திரி – 10
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • பட்டை -2
  • கிராம்பு – 2
  • நெய் – 1 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு


செய்முறை


கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாத்திரத்தில் 2 கப் அரிசி சேர்த்து சாதமாக வடித்து ஒரு பௌலில் சாதத்தை கொட்டி ஆற விட வேண்டும். அப்படி செய்தால் சாதம் உதிரி உதிரியாக கிடைக்கும்.
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் ஒரு கப் நெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும். பிறகு அதில் வாசனைக்காக பட்டை, கிராம்பு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து வறுத்து கொள்ளவும்.

பொன்னிறமாக வறுத்த பிறகு வடித்த சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து பத்து நிமிடம் கிளற வேண்டும். கடைசியில் கொத்தமல்லி தழையை தூவினால் சுவையான நெய் சோறு தயார்.

உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button