
சமைக்க தேவையானவை
- நெல்லிக்காய் – 2
- புளி – சுண்டைக்காய் அளவு
- பருப்பு வேகவைத்த நீர் – ஒரு கிண்ணம்
- இஞ்சி – 5 கிராம்
- ரசப்பொடி – ஒரு கரண்டி
- உப்பு – தேவையான அளவு
தாளிக்க
- நெய் அல்லது எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
- கடுகு – தலா ஒரு தேக்கரண்டி
- சீரகம் – தலா ஒரு தேக்கரண்டி
ரசப்பொடி செய்முறை
- சீரகம் – ஒரு தேக்கரண்டி
- வறுத்த வெந்தயம், பெருங்காயம் – தலா அரை தேக்கரண்டி
- தனியா – 2 தேக்கரண்டி
- மிளகு – ஒரு தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – 3
- கடலைப் பருப்பு, துவரம் பருப்பு – தலா ஒரு தேக்கரண்டி
செய்முறை
முதலில் ரசப்பொடி செய்ய மேலே கூறிய எல்லாவற்றையும் காயவைத்து, குருணையாகப் பொடித்துக்கொள்ளவும். பிறகு இஞ்சியைத் துருவிக்கொள்ளவும். புளியை ஊறவைத்துத் தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும்.
நெல்லிக்காய், இஞ்சியை மின் அம்மியில் விழுதாக அரைத்து, புளித் தண்ணீருடன் சேர்த்து உப்பு, ஒரு தேக்கரண்டி ரசப்பொடி, பருப்புத் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். கடாயில் நெய்/எண்ணெய் விட்டு, கடுகு தாளித்துக் கொட்டி பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1