குழம்பு

பச்சை மிளகாய் குழம்பு

Green Chilly Curry

சமைக்க தேவையானவை


  • பச்சை மிளகாய் – 15
  • குட மிளகாய் – 1
  • தக்காளி – 1
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 15
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உளுந்தம் பருப்பு – அரை ஸ்பூன்
  • புளி – சிறிய உருண்டை
  • வெந்தயம் – 1 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு


செய்முறை


முதலில் பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும். பிறகு புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவேண்டும் .பின் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.

பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். பிறகு வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பை போடவும். பின்னர் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவேண்டும். பின் மிளகாய் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும். காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு தயார்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button