காரக் குழம்புகுழம்பு

பச்சை மொச்சை கத்தரிக்காய் காரக் குழம்பு

Pongal Kulampu

சமைக்க தேவையானவை


 • மொச்சை – 100 கிராம்
 • புளி – 1 எலுமிச்சை அளவு
 • பெரிய வெங்காயம் – 1
 • சின்ன வெங்காயம் – 1/2 கப்
 • கத்தரிக்காய் – 1
 • தக்காளி – 1
 • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
 • மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
 • மல்லித்தூள் – 1டேபிள் ஸ்பூன்
 • பூண்டு – 4 பல்
 • பச்சை மிளகாய் – 2
 • உப்பு – தேவையான அளவு

மசாலா அரைக்க

 • சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
 • சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
 • கசகச – 3 டேபிள் ஸ்பூன்
 • பட்டை – 1 துண்டு
 • தேங்காய் – 1/2 கப்

தாளிக்க

 • கடுகு – 1 ஸ்பூன்
 • வெந்தயம் – 1/2 டேபிள் ஸ்பூன்
 • மிளகாய் வற்றல் – 3
 • கறிவேப்பிலை
 • பெருங்காயத்தூள் – சிறிது


செய்முறை


பொங்கல் பண்டிகை அறுவை திருநாள் என்பதால் பொங்கலின் போது கிடைக்கும் பச்சை மொச்சை கொண்டு சமைக்கும் சுவையான குழம்பு. சில வீடுகளில் பொங்கல் அன்று கூட சமைப்பார்கள். வெண்பொங்கலுடன் உண்பதற்கு தகுந்த குழம்பு.

வாணலியில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்து கொள்ளவும். இதனுடன் தோல் உரித்த சின்ன வெங்காயம், நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் பூண்டு சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் நீளவாக்கில் நறுக்கிய கத்தரிக்காய், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து சுருள வதக்கவும்.

இதனுடன் புளித்தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். சில நிமிடங்கள் கொதித்ததும் வேக வைத்த மொச்சை சேர்க்கவும். நன்றாக கொதித்து வரும் போது அரைத்த மசாலா விழுது சேர்த்து நன்றாக கலந்து மசாலா வேகும் வரை கொதிக்க விடவும். குழம்பு கொதித்து எண்ணை விட்டு மேலே வரும் போது இறக்கி கொத்தமல்லி தூவவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அனைத்து சாமான்களையும் வறுத்து கொள்ளவும். தேங்காயை தனியாக எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து கொள்ளவும். சூடு ஆறியதும் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.

இதேபோல் பச்சை மொச்சை என்றால் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும். காய்ந்த மொச்சை என்றால் 6 மணி நேரம் ஊற வைத்து சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button