பிரியாணிபிரியாணி சைவம்

பச்சை மொச்சை பிரியாணி

Pachchai Mochchai Biriyani

சமைக்க தேவையானவை


  • உலர்ந்த மொச்சைக்கொட்டை – அரை கப் (ஊறவைக்கவும்)
  • மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
  • சிறிய சதுரவடிவில் நறுக்கிய பிரெட் துண்டுகள் – 10
  • பாசுமதி அரிசி – 2 கப்
  • நெய் – 2 தேக்கரண்டி
  • எண்ணெய் – 4 தேக்கரண்டி
  • உப்பு – தேவைக்கேற்ப

அரைத்துக்கொள்ள

  • சின்ன வெங்காயம் – 10
  • இஞ்சி – ஒரு சிறிய துண்டு
  • தக்காளி – 2
  • மிளகாய்த்தூள் – 3 தேக்கரண்டி
  • கொத்தமல்லித் தழை – கால் கப்.


செய்முறை


முதலில் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவிடவும். குக்கரில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும்.

இதில் மூன்றரை கப் நீர் விட்டு, உப்பு, மஞ்சள்தூள், அரிசி, ஊறவைத்த மொச்சைக்கொட்டை சேர்த்து ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும். ஆவி வெளியேறியதும், வாணலியில் நெய் விட்டு பிரெட் துண்டுகளை வறுத்துச் சேர்க்கவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button