
சமைக்க தேவையானவை
- எலும்புடன் கோழி – கால் கிலோ
- வெங்காயம் – 2
- தக்காளி – 2
- மல்லி தூள் – ஒரு தேக்கரண்டி
- ஏலக்காய் – 2
- மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
- கரம் மசாலா – அரை தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
- தயிர் – கால் கப்
- மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
- பட்டை – ஒரு சிறுத் துண்டு
- லவங்கம் – 3
- பிரியாணி இலை – ஒரு சிறுத் துண்டு
- கொத்தமல்லி இலை
- எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து சிவக்க வதக்கவேண்டும் . பின் இதை மிக்ஸில் அரைத்து விழுதாக்கவேண்டும்
பின் மீண்டும் அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து அதில் அரைத்த விழுது சேர்த்து வதக்கவேண்டும் . இதில் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவேண்டும் .
பின் விழுதாக அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி பச்சை வாசம் போய் எண்ணெய் பிரியும் போது சிக்கன் துண்டுகளை சேர்த்து மூடி வேக விடவும்..
சிக்கன் வெந்து மீண்டும் கலவை திரண்டு வரும் போது தயிர் சேர்த்து கலந்து நன்றாக கலவை கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது எடுக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
1
+1
+1
+1
+1
+1
+1