குருமாசைவம்

பட்டர் பீன்ஸ் குருமா

Butter Beans Curry

சமைக்க தேவையானவை


  • பட்டர் பீன்ஸ் – 1 கப்
  • பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
  • மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • மல்லித் தூள் – 1 1/2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி – சிறிது
  • உப்பு – சுவைக்கேற்ப தாளிப்பதற்கு
  • எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • கிராம்பு – 2
  • பட்டை – 1/2 இன்ச்
  • பூண்டு – 5 (பொடியாக நறுக்கியது) அரைப்பதற்கு
  • தேங்காய் – 3/4 கப்
  • முந்திரி – 3
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • கசகசா – 1 டீஸ்பூன்
  • பொட்டுக்கடலை – 1 டீஸ்பூன்


செய்முறை


முதலில் பட்டர் பீன்ஸின் தோலை நீக்கி, தனியாக வைத்துக் கொள்ளுங்கள். பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸர் ஜாரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி, நன்கு பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.

பின் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு மென்மையாக வதக்கவும். பிறகு மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அடுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து, 2 கப் நீர் ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

பின்பு எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், பட்டர் பீன்ஸை சேர்த்து, குக்கரை மூடி குறைவான தீயில் 2 விசில் விட்டு இறக்கவும். இறுதியில் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பட்டர் பீன்ஸ் குருமா ரெடி.

உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button