இதர குழம்பு
பட்டாணி முந்திரி கிரேவி

சமைக்க தேவையானவை
- பச்சைப் பட்டாணி – ஒரு கப்
- வெங்காயம் – 2
- தக்காளி – ஒன்று
- கொத்தமல்லி – ஒரு சிறிய கட்டு
- பச்சை மிளகாய் – 3
- தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன்
- கரம்மசாலாத்தூள், உலர்ந்த வெந்தயக்கீரை – 2 சிட்டிகை
- பூண்டு – 2
- தனியாத்தூள் – ½ தேக்கரண்டி
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில்பச்சைப் பட்டாணியை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி அரைத்துக்கொள்ளவும்.
முந்திரிப் பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து தயிருடன் சேர்த்து அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் விட்டு, அரைத்த விழுதுகளை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து, கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கி, பால் சேர்க்கவும்.
சிறிதளவு தண்ணீரும் சேர்க்கவும். இதில் வெந்த பட்டாணி, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, உலர்ந்த வெந்தயக்கீரை சேர்த்து, சூடாகப் பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1