இனிப்புபாயாசம்

பன்னீர் பாயாசம்

Panneer Payasam

சமைக்க தேவையானவை


  • பால் – 1 லிட்டர்
  • பன்னீர் – 1 கப்
  • அரிசி மாவு – 1 ஸ்பூன்
  • ஏலக்காய் – 6
  • சர்க்கரை – 1/4 கப்
  • உலர்ந்த திராட்சை – தேவையான அளவு
  • குங்குமப்பூ – தேவையான அளவு
  • பாதாம் – 5
  • பிஸ்தா – 5


செய்முறை


பன்னீரை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் பால் மற்றும் அரிசி மாவை சேர்த்து நன்றாக 10 நிமிடம் கிளற வேண்டும்.

கிளறும் பொழுது கட்டிகள் வராதவாறு பார்த்து கொள்ள வேண்டும். 10 நிமிடம் கழித்த பிறகு பால் கெட்டி ஆகி விடும். பிறகு அதில் உலர்ந்த திராட்சை பழங்கள், ஏலக்காய், குங்குமப்பூ, தேவையான அளவு சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

நன்றாக கெட்டி பதத்தில் வந்த பிறகு அதில் நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து ஒரு 3 நிமிடம் மிதமான தீயில் கிளறி விடவும். அடுத்து அடுப்பை அனைத்து பாயசத்தை ஒரு பௌலில் மாற்றி பாதாம், பிஸ்தா குங்கும பூ ஆகியவை கொண்டு அலங்கரித்தால் பன்னீர் பாயசம் தயார்.

உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button