
சமைக்க தேவையானவை
- பருப்புக்கீரை 1 கப்
- எண்ணெய் 15 மி.லி
- ஊற வைத்து, அரைத்த கடலைப்பருப்பு 1 கப்
- கறிவேப்பிலை,கொத்தமல்லி சிறிது
- கடுகு 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் 3
- கறிவேப்பிலை,கொத்தமல்லி சிறிது
- பொடியாக நறுக்கிய தக்காளி 2
- புளி எலுமிச்சை அளவு
- மிளகாய் தூள் 2 டேபிள்ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய வெங்காயம் 2
- வெந்தயம் 1 டீஸ்பூன்
- நல்லெண்ணெய் 1 டீஸ்பூன்
- உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரைத்த பருப்பு, சுத்தம் செய்து ஆய்ந்த பருப்புக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்துப் பிசைய வேண்டும்.
பின் சின்னச் சின்ன உருண்டைகளாக்கி, ஆவியில் வேக வைக்கவும். பின்பு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம் தாளிக்கவும். கறிவேப்பிலை, சிறிது வெங்காயம் சேர்த்துப் பொன்னிறத்துக்கு வதக்கவும்.
பின்பு தக்காளி சேர்க்கவும். கொதித்த பின் புளித் தண்ணீர், மிளகாய் தூள், உப்பு சேர்த்து. மேலும் சில நிமிடங்களுக்குக் கொதிக்க விடவேண்டும்.
நன்கு கொதித் பின் ஆவியில் வேக வைத்த உருண்டைகளை மெதுவாகச் சேர்க்கவேண்டும் . இறக்கும் போது 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, இன்னும் கொஞ்சம் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1