
சமைக்க தேவையானவை
- கோதுமை மாவு – 2 கப்
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- மிளகாய்தூள் – 2 தேக்கரண்டி
- உலர்ந்த மாங்காய்தூள் – அரை தேக்கரண்டி
- வேகவைத்த துவரம் பருப்பு – அரை கப்
- உப்பு – தேவையான அளவு
- சீரகத்தூள் – அரை தேக்கரண்டி
- எண்ணெய் – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் எல்லாப் பொருட்களையும் ஒன்று சேர்த்து கலக்கவும். பின்னர் தண்ணீர் தெளித்து நன்றாக பிசையவும்.
பிறகு ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். இப்பொழுது உருண்டைகளாக உருட்டி கோதுமை மாவு தூவி சப்பாத்தியாக இடவும்.
பின் தோசைக்கல்லை சூடாக்கி சப்பாத்தியை போட்டு எண்ணெய் விட்டு சுடவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1