சாம்பார்

பலா கொட்டை சாம்பார்

Palaa Kottai Sampar

சமைக்க தேவையானவை


  • பலாக்கொட்டை – 10
  • புளி – நெல்லிக்காய் அளவு
  • துவரம்பருப்பு – 100 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
  • சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்

தாளிக்க

  • கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – ஒன்று
  • பெருங்காயத்தூள் – சிறிதளவு
  • எண்ணெய் – ஒரு டீஸ்பூன்


செய்முறை


துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். பலாக்கொட்டையை நசுக்கி, மேலே உள்ள தோலை உரித்து, வேகவைத்துக் கொள்ளவும்.

புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி.. சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, வேகவைத்த பலாக்கொட்டை, துவரம்பருப்பையும் சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்து இறக்கவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button