ஊறுகாய்சைடீஸ்

பாகற்காய் ஊறுகாய்

Cantaloupe Pickle

சமைக்க தேவையானவை


  • பிஞ்சு பாகற்காய் – கால் கிலோ
  • தக்காளி, எலுமிச்சம்பழம் – தலா ஒன்று
  • பச்சை மிளகாய் – 2
  • மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்
  • கடுகு, பெருங்காயத் தூள் – தலா ஒரு டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு


செய்முறை


பாகற்காயை கழுவி, ஈரம் போகத் துடைத்து, உள்ளே இருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு, நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, பச்சை மிளகாயையும் நறுக்கிக் கொள்ளவும். எல்லா காய்களையும் ஒன்று சேர்த்து… உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.

வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, காய்கறி கலவையைக் சேர்த்துக் கிளறி, ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். இதில் எலுமிச்சம்பழம் பிழிந்து கலக்கினால் பாகற்காய் ஊறுகாய் தயார்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button