
சமைக்க தேவையானவை
- சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
- துவரம் பருப்பு – ஒரு கப்
- பெரிய பாகற்காய் – 1
- மஞ்சள், உளுத்தம் பருப்பு , மிளகு, சீரகம், பச்சரிசி, தனியா – தலா ஒரு டீஸ்பூன்
- தேங்காய் துருவல் – அரை கப்
- காய்ந்த மிளகாய் – 2
- புளித் தண்ணீர் – ஒரு கப்
- கடலை பருப்பு -1/2 கப்
- உப்பு – தேவையான அளவு
- கறிவேப்பிலை, கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயம், எண்ணெய் – தலா ஒரு ஸ்பூன்.
செய்முறை
முதலில் கடலை மற்றும் துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். பின் காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், பச்சரிசி, தனியா, உ.பருப்பை தனியாக எண்ணெய் விட்டு மஞ்சளுடன் வறுத்துக் கொள்ளவும்.
பிறகு இதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து அரைத்து, வேக வைத்த பருப்புடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
பின் பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் வதக்கவும். இதில் புளித் தண்ணீரை விட்டு சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
பிறகு இத்துடன் ஏற்கெனவே கலந்து வைத்துள்ள கலவையை சேர்க்கவும். வெந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயம் ,கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1