
சமைக்க தேவையானவை
- பாகற்காய் வற்றல் – அரை கப்
- கடுகு – அரை டீஸ்பூன்
- புளி – 50 கிராம்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
- பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன்
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைக்க
- கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
- தனியா – 2 டீஸ்பூன்
- வெந்தயம் – அரை டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 5
செய்முறை
முதலில் கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு வறுக்க வேண்டும். ஆற வைத்தபின் மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதே கடாயில் எண்ணெய் விட்டு பாகற்காய் வற்றலை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
பின்பு கடாயில் இருக்கும் அதே எண்ணெயில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கலக்க வேண்டும்.
பின் கொதிக்க ஆரம்பித்ததும், வறுத்த பாகற்காய், அரைத்த கலவை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவேண்டும். பின்பு எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் வெல்லம் சேர்த்து பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1