
சமைக்க தேவையானவை
- பாதாம் பருப்பு – ஒரு கப்
- சர்க்கரை – 1/2 (அ) 3/4 கப்
- தேங்காய்ப்பூ – 1/3 கப்
- ஏலக்காய் – 2
- நெய்/வெண்ணெய் – 1 (அ) 2 மேசைக்கரண்டி
- கோதுமை மாவு – 2 கப்
- உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
பாதாமை சுடுத் தண்ணீரில் ஊற வைத்து, நீரை வடித்து தோலுரித்து வைக்கவும். ஏலக்காயை தட்டி, பொடித்து வைக்கவும். தோலுரித்து வடிக்கட்டிய பாதாமை, ஃபுட் ப்ராசஸசர்/ மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் பல்ஸ் மோடில் ஓட்டி, பொடித்து வைக்கவும்.
ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய்/வெண்ணெய் விட்டு, உருகியதும், பொடித்து வைத்த பாதாம் பொடியை கொட்டி சில நிமிடங்கள் வறுக்கவும். பிறகு இதனுடன் சர்க்கரையை கொட்டி கலந்து விடவும். சில நிமிடங்களுக்குப்பின் இதனுடன் தேங்காய்ப்பூவையும் சேர்த்து கலந்து விடவும்.
சிறிது நேரத்தில் சர்க்கரை கரைந்து கலவை சிறிது இளகியதும் பொடித்த ஏலக்காயைத் தூவி, சிறிது கலந்து அடுப்பை அணைத்து விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். கோதுமை மாவை சிறிது உப்பு, எண்ணெய் சேர்த்து, சப்பாத்தி மாவுப்பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர், சப்பாத்தி மாவை பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து, சிறிது மாவை தேய்த்து, ஸ்டஃப்டு பராத்தா செய்யும் முறையில் 2 தேக்கரண்டி அளவு பாதாம் கலவையை உள்ளே வைத்து மூடி, சப்பாத்திகளாக தேய்க்கவும்.
பின்னர் தவாவில் இரண்டு புறமும் வேகவிட்டு எடுக்கவும்.பராத்தாக்களை சுட்டு எடுத்தவுடன், அந்த சூட்டிலேயே பராத்தாவின் மேலே துளி நெய் தடவி பரிமாறவும். சுவையான பாதாம் பராத்தா ரெடி.