
சமைக்க தேவையானவை
- பாசுமதி அரிசி 750 கிராம்
- நெய்- 3 ஸ்பூன்
- கரம் மசாலா- 1/4 ஸ்பூன்
- எண்ணெய் – 1 ஸ்பூன்
- பிரிஞ்சி இலை- 2
- மல்லித்தூள்- 1/4 ஸ்பூன்
- பால்- 2 ஸ்பூன்
- குங்குமப்பூ- 1/4 சிட்டிகை
- கிராம்பு- 8
- பட்டை- 4
- தக்காளி- 2
- ஏலக்காய்- 9
- வெங்காயம்- 1
- பூண்டு- 20பல்
- தயிர்- 2 ஸ்பூன்
- கொத்தமல்லி புதினா-தேவையான அளவு
- சிவப்பு மிளகாய்- 1/2 ஸ்பூன்
- உருளைக்கிழங்கு- 2
- பச்சை மிளகாய்- 3
- இஞ்சி- 50கிராம்
- கேவைத்த மட்டன் 750 கிராம்
- எலுமிச்சை- 1
- சீரகம்- 1/4 ஸ்பூன்
- உலர்ந்த பிளம்ஸ்
- உலர்ந்த திராட்சை
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லி, புதினா இவையனைத்தையும் தண்ணீர்விட்டு அரைத்துவைக்கவேண்டும். பின்பு கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சேர்த்து வறுத்து, பெரியவெங்காயம் சேர்த்து கிளறவும்.
பிறகு பொன்னிறமானதும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி அதனுடன் அரைத்துவைத்துள்ள கலவையை கலந்து தக்காளி சேர்த்து, அதில் மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா தயிர் சேர்த்து கிளறி போதுமான அளவு உப்பு சேர்க்கவும்.
பின்னர் வேகவைத்த மட்டன் சேர்த்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி வேகவைத்த பாசுமதி அரிசி சாதத்தை அதில் கலந்து அதன் மேல் பிளம்ஸ் வறுத்த வெங்காயம், திராட்சை, புதினா கொத்தமல்லி குங்குமப்பூ பால் கரைசல் சேர்த்து தம் கட்டி இறக்கி நெய்விட்டு பரிமாறலாம்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1