
சமைக்க தேவையானவை
- புழுங்கல் அரிசி, பச்சரிசி – தலா ஒரு கப்
- உளுத்தம்பருப்பு – கால் கப்
- பாலக் கீரை – ஒரு கப்
- பச்சை மிளகாய் (விழுதாக அரைக்கவும்) – 3
- சீரகம் – ஒரு டீஸ்பூன்,
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் இரண்டு வகை அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊற வைத்து, தனித்தனியாக அரைத்து, ஒன்றாக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
பாலக்கீரையை ஆய்ந்து, சுடு தண்ணீரில் வேக வைத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த கீரை, சீரகம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும், அரைத்த மாவுடன் சேர்க்கவும்.
தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை வார்த்தெடுத்தால்… கீரை தோசை தயார். ஊறுகாயுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்!
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1