கீரைசைடீஸ்

பாலக் பன்னீர்

Pollock Paneer

சமைக்க தேவையானவை


  • பன்னீர் – 250 கிராம்
  • எண்ணெய் – 2-3 டேபிள் ஸ்பூன்
  • நறுக்கிய இஞ்சி, பூண்டு – 2 டேபிள் ஸ்பூன்
  • வெங்காயம் – 2 (நறுக்கியது)
  • தக்காளி – 2 (நறுக்கியது)
  • பசலைக் கீரை – 2 கட்டு
  • வெந்தயக் கீரை – 1/2 கப்
  • பச்சை மிளகாய் – 4-5
  • கொத்தமல்லி – சிறிது
  • உப்பு – தேவையான அளவு
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • கரம் மசாலா – 1 டீஸ்பூன்
  • தயிர் – 3-4 டேபிள் ஸ்பூன்
  • பிரஷ் க்ரீம் – 3-4 டேபிள் ஸ்பூன்


செய்முறை


முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் பசலைக்கீரை, வெந்தயக் கீரை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் தக்காளியை சேர்த்து கிளறி, தீயை அதிகரித்து 10 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்க வேண்டும். பிறகு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள கீரையை சேர்த்து, அத்துடன் உப்பு, கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். அடுத்து அதில் தயிர், க்ரீம் சேர்த்து கிளறி, பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து மெதுவாக பிரட்டி, 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், பாலக் பன்னீர் ரெடி.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button